சினிமா

கணவர் மறைவிற்கு பின், மீண்டும் களமிறங்கிய நடிகை மேக்னா ராஜ் ! தீயாய் பரவும் புகைப்படம்!!

Summary:

கணவர் மறைவிற்கு பின், மீண்டும் களமிறங்கிய நடிகை மேக்னா! தீயாய் பரவும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மேக்னா ராஜ். அதனைத் தொடர்ந்து அவர் பல கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல முன்னணி கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், திடீரென சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவரது மரணம் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து மேக்னாவிற்கு ஆண்குழந்தை பிறந்தது. மேக்னா திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது குழந்தை பிறந்த பிறகு அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அதாவது அவரது நடிப்பில் தற்போது கன்னடத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்களை மேக்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement