
megen crying in bigboss houseby reshma
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 99 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் சீசன் மூன்று இந்த வாரத்துடன் முடியவடைய உள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் தற்போது 12 பேர் வீட்டை விட்டு வெளியேறி 4 பேர் மட்டுமே இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் இருந்த சிறந்த போட்டியாளர்களில் ஒருவரான தர்சன் இறுதி வரை சென்று பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரின் இந்த திடீர் வெளியேற்றம் பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
அதனை தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த மீரா மிதுன், ரேஷ்மா, மோகன் வைத்யா மற்றும் பாத்திமா பாபு ஆகியோர் சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து ரேஷ்மா அன்பைப் பற்றி அனைவர் முன்பும் பேசியுள்ளார். அதில் முகேனை சம்பந்தப்படுத்தியும் பேசியுள்ளார்.
அப்பொழுது அனைவரும் அழுகையை அடக்கிக்கொண்டு கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஒருகட்டத்தில் முகேன் அழுதுகொண்டே ரேஷ்மாவை கட்டியணைத்துள்ளார். அந்த பிரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement