வாவ்.. சூப்பர் ரியாக்ஷன்.! மேகம் கருக்காதா பாடலின் அன்சீன் மேக்கிங் வீடியோவை பகிர்ந்த பிரபலம்.! நீங்க பார்த்தீங்களா!!!

வாவ்.. சூப்பர் ரியாக்ஷன்.! மேகம் கருக்காதா பாடலின் அன்சீன் மேக்கிங் வீடியோவை பகிர்ந்த பிரபலம்.! நீங்க பார்த்தீங்களா!!!


megam-karukkaatha-making-video-viral

தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இத்திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். 

திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யாமேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதிலும் குறிப்பாக மேகம் கருக்காதா என்ற பாடல் ரசிகர்களிடையே செம ஹிட்டானது. அதில் போடப்பட்ட டான்ஸ் ஸ்டெப்புகள் அனைத்தும் மக்களை பெருமளவில் கவர்ந்தது. இந்த நிலையில், தற்போது மேகம் கருக்காதா பாடலின் யாரும் பார்த்திடாத மேக்கிங் வீடியோவை ஜானி மாஸ்டர் தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். அதில் அவர் இந்த பாடலுக்கு அமோகமான வரவேற்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி என கூறி பதிவிட்டுள்ளார்.