சினிமா

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!

Summary:

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!

தெலுங்கு சினிமாவில் அன்று முதல் இன்று வரை மிகவும் இளமையாகவும், தனது அசத்தலான நடிப்பாலும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் பல சூப்பர் ஹூட் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஆச்சர்யா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தற்போது சிரஞ்சீவியின் கைவசம் காட் பாதர், போலா ஷங்கர் ஆகிய படங்கள் உள்ளன. இப்படங்கள் மீது ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.

இந்நிலையில் சிரஞ்சீவி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் சிரஞ்சீவியா இது என கமெண்ட் செய்தும் அப்புகைப்படத்தை வைரலாக்கியும் வருகின்றனர்.


Advertisement