அப்படி இருந்த மீரா ஜாஸ்மினா இது.. சிக்கென மாறிய புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்!!

அப்படி இருந்த மீரா ஜாஸ்மினா இது.. சிக்கென மாறிய புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்!!


meerajasmin-latest-photo-leaked

தமிழ் சினிமாவில் ரன், சண்டக்கோழி, பாலா,புதிய கீதை, நேபாளி என்ன பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மீரா ஜாஸ்மின். மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஏகப்பட்ட வெற்றிப் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்ற பொறியாளரை  திருமணம் செய்து கொண்டு துபாயில் வசித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தாமல் விலகியிருந்த  மீரா ஜாஸ்மின் கடந்த ஆண்டு நகைக்கடை ஒன்றுக்கு சென்றநிலையில் அவரது புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் அவர் மிகவும் குண்டாக இருப்பதை கண்ட ரசிகர்கள் பெருமளவில் அதிர்ச்சி அடைந்தனர்.

meera jasmine

 

இந்நிலையில் சமீபத்தில் மலையாள இயக்குனர் அருண்கோபி துபாய்க்கு சென்ற நிலையில், அங்கு மீரா ஜாஸ்மினை சந்தித்து அவருடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

meera jasmine

அதில் மீரா ஜாஸ்மின் தனது உடல் எடையை பெருமளவில் குறைத்து மிகவும் ஒல்லியாக இருப்பதை கண்ட ரசிகர்கள் அவ்வளவு குண்டாக இருந்த மீரா ஜாஸ்மினா இது என பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

meera jasmine

மேலும் பல ரசிகர்கள் அவர் மீண்டும் நடிக்க வர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர் மேலும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.