சினிமா

மீரா மிதுனுக்கு இப்படியொரு ஆசை இருக்கா?? கிளம்புங்க.. முதல்ல அத செய்யுங்க! துரத்தியடிக்கும் ரசிகர்கள்!

Summary:

Meera mithun wish nithyananda for kailasa

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் மீரா மிதுன். மாடல் அழகியான இவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம்  உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.  இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுன், இயக்குனர் சேரன் மீது அவதூறுகளை கிளப்பி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார். 

மேலும் சமீபத்தில் அவர் நடிகர் விஜய் மற்றும் சூர்யா குறித்து தரக்குறைவாக விமர்சித்து தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தார். மேலும் அவர்களது மனைவிகளை பற்றியும் மிக  மோசமாக அவதூறான வார்த்தைகளால் பேசியிருந்தார். இதனால் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் அனைவரும் மீரா மிதுன் மீது பெரும் கடுப்பில் இருந்தனர். 

மேலும் பல திரைப்பிரபலங்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மீரா மிதுன்  தற்போது நித்யானந்தாவை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைவரும் அவரை கிண்டல் செய்தார்கள்,  அனைவரும் அவரை துஷ்பிரயோகம் செய்தனர். அனைவரும் அவரை தரக்குறைவாக பார்த்தனர். அனைத்து மீடியாக்களும் அவருக்கு எதிராகவே இருந்தது. 

ஆனால் இன்று அவர் கைலாசா எனும் புதிய நாட்டை உருவாக்கியுள்ளார். விரைவில் கைலாசாவுக்கு செல்ல விரும்புகிறேன் என மீரா மிதுன் தெரிவித்துள்ளார். இதனை கண்டு ரசிகர்கள்,  முதலில் அதை செய். எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக கிளம்பு,  நான் வேணும்னா பிளைட் டிக்கெட் எடுத்து தருகிறேன்  என கிண்டல் செய்து வருகின்றனர். 


Advertisement