சினிமா

மறுபடியும் ஆரம்பிச்சாச்சா! நடிகை குஷ்புவை சீண்டிய சர்ச்சை இளம்நாயகி! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

Summary:

சர்ச்சை நாயகி மீரா மிதுன் குஷ்புவின் அரசியல் வாழ்க்கையை விமர்சித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை குஷ்பூ கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக கட்சியில் இணைந்து 4 ஆண்டுகளுக்கு  திமுக கட்சியை விட்டு விலகி,  காங்கிரசில் இணைந்தார். பின்னர் ஆறு ஆண்டுகளாக அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக பொறுப்பு வகித்து வந்த அவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் குஷ்பு சமீபத்தில் வேல்யாத்திரை  நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது அவர் சென்ற கார் கன்டெய்னர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த நிலையில் நடிகை குஷ்புவின் அரசியல் வாழ்க்கையை விமர்சித்து சர்ச்சை நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் 
எம்.எல்.ஏ சீட்டுக்கு தி.மு.க கட்சியில் சேர்ந்து 10 வருடம் தி.மு.க ஆட்சிக்கே வர முடியவில்லை. எம்.பி. சீட்டுக்கு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 10 வருடம் காங்கிரஸ் ஆட்சிக்கே வரமுடியவில்லை. இப்போது பா.ஜனதாவில் சேர்ந்து இருக்கிறீர்களே மேடம் குஷ்பு. கார் விபத்து டிராமா. எதிர்காலம் தேருமா? என தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து குஷ்பு யார் பெயரையும் குறிப்பிடாமல் ஒரு மனிதனாக, நடிகராக மோசமானவர் என்று நிரூபித்தவரும், பிறரது கவனத்தை ஈர்க்க பெயர் போனவருமான நடிகை எனது கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறார். நான் என்ன செய்வது என பதிலளித்துள்ளார்.


Advertisement