டார்ச்சர் தாங்கலை.. என் தற்கொலைக்கு அவர்தான் காரணம்! முதல்வர், பிரதமரை டேக் செய்து மீரா மிதுன் வெளியிட்ட பதிவு!!

டார்ச்சர் தாங்கலை.. என் தற்கொலைக்கு அவர்தான் காரணம்! முதல்வர், பிரதமரை டேக் செய்து மீரா மிதுன் வெளியிட்ட பதிவு!!


meera-mithun-tweet-about-suicide

தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை டேக் செய்து பிக்பாஸ் மீரா மீதுன் வெளியிட்டுள்ள பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அங்கு எழுந்த சர்ச்சைகளால் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் மாடலிங் துறையை சேர்ந்த மீரா மிதுன். சர்ச்சைகளுக்கு பெயர்போன அவர் அவ்வப்போது தனது கருத்துக்களால் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளானார். இந்நிலையில் இடையில் சில காலங்கள் ஓய்ந்திருந்த அவர் தற்போது தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக டுவிட்டரில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் அஜித் ரவியின் அமைப்பை விட்டு விலகினேன். அந்த அமைப்புக்காக நான் கடுமையாக வேலை செய்து, அழகிப் பட்டம் வென்றுகொடுத்து பெருமை சேர்த்துள்ளேன். ஆனால் பின்னர் அஜித் ரவி செய்த அநீதியால் அதிலிருந்து விலகி சொந்த அமைப்பை உருவாக்கினேன். ஆனால் என் மீது போலி வழக்குகள் தொடர்ந்து அஜித் ரவி என் பெயரை கெடுத்துவிட்டார். தொடர்ந்து நிறைய பிரச்சினைகள் கொடுத்தார்.

அவர் என்ன செய்தாலும் அதிலிருந்து மீண்டேன். ஆனாலும் அவர் என்னை பின்தொடர்கிறார், என் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்துகிறார். 3 ஆண்டுகளாக என்னை டார்ச்சர் செய்கிறார். அஜித் ரவியால் நான் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். தற்கொலைதான் எனக்கிருக்கும் ஒரே வழி. என் தற்கொலைக்கு அவர் மட்டும்தான் காரணம். நான் இறந்த பிறகு அஜித் ரவி தண்டிக்கப்பட வேண்டும். இது தற்கொலை அல்ல கொலை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதனை அவர் பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு டேக் செய்து, இது பெண்ணுக்கு எதிரான வன்முறை. இதை ஆண்கள் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. நான் இறந்து என்னை நிரூபித்து வெற்றி பெறுவேன். ஏனென்றால் அதற்கு மேல் என்னை துன்புறுத்தி அவர்களால் மகிழ முடியாது. அவர்கள் தோற்றுவிடுவார்கள். நான் பெருமையோடு சாவேன். ஒரு தமிழராக நான் அதை நிச்சயம் செய்வேன். நான் இறந்த பிறகு அவரை கைது செய்து தண்டிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.