பிக்பாஸில் இருந்து சுரேஷ் வெளியேறினால், அதற்கு அந்த டுபாக்கூர் தான் காரணம்! கொளுத்திபோட்டு வச்சு செய்த பிரபலம்!

பிக்பாஸில் இருந்து சுரேஷ் வெளியேறினால், அதற்கு அந்த டுபாக்கூர் தான் காரணம்! கொளுத்திபோட்டு வச்சு செய்த பிரபலம்!


meera-mithun-tweet-about-sanam-shetty

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4ல் கடந்த இரு நாட்களாக, போட்டியாளர்கள் பாதி பேர் அரக்கர்கள், அரக்கிகளை போலவும், மீதி பேர் அரச குடும்பத்தை போலவும் உடையணிந்து கொள்ளவேண்டும். அரக்கர்கள் என்ன செய்தாலும் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிலையாக அமர்ந்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற சுவாரஸ்ய டாஸ்க் ஒன்றை கொடுத்தார் பிக்பாஸ்.

இந்நிலையில் சுரேஷ், அரக்கியாக மாறிய சனம் ஷெட்டியை கம்பால் அடித்துள்ளார். உடனே கொதித்தெழுந்த சனம் சுரேஷை மோசமாக கடுமையாக மரியாதையின்றி திட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து சுரேஷ் தன்னை கன்பெஷன் ரூமிற்கு அழைக்குமாறு பிக்பாஸிடம் கேட்டார்.பின்னர் அவரை உள்ளே அழைத்த பிக்பாஸ், சுரேஷ் நீங்க தெரிஞ்சு செஞ்சீங்களா என கேட்கிறார். உடனே சுரேஷ் இல்லை தெரியாமல் செய்ததுதான். அனைவரும் என்னை கார்னர் செய்து மோசமாக பேசுறாங்க என கூறி கதறி அழுதார். 

இந்த நிலையில் இதனைக் கண்ட பிக்பாஸ் சீசன் 3ன் போட்டியாளர்களுள் ஒருவரான மீரா மிதுன், சுரேஷ் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறினால், அதற்கு டுபாக்கூர், கிரிமினல், கொலைகாரி திட்டமிட்டு போட்ட நாடகம் தான் காரணம். சுரேஷ் சக்கரவர்த்தி, நான் உங்களுக்கு ஆதரவாக உள்ளேன் கவலைப்பட வேண்டாம் என மீராமிதுன் சனம் ஷெட்டிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.