நடிகர் வடிவேலுக்கு அழைப்பு விடுவித்த மீரா மிதுன்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!!

நடிகை மீரா மிதுன் தான் சொந்தமாக எடுக்கவுள்ள படத்தில் விருப்பமிருந்தால் நடிக்கலாம் என முன்ன


meera-mithun-post-video-for-vadivelu

நடிகை மீரா மிதுன் தான் சொந்தமாக எடுக்கவுள்ள படத்தில் விருப்பமிருந்தால் நடிக்கலாம் என முன்னணி காமெடி நடிகர் வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு ஒரு சில பிரச்சினைகளால் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் நண்பேண்டா வாட்ஸ்அப் குழுவினர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்பொழுது அவர், நான் பத்து வருடமாக லாக்டவுனில்தான் இருக்கிறேன். எனக்கு நடிக்க ஆசை இருக்கிறது, மேலும் எனது உடலில் தெம்பும் இருக்கிறது. ஆனால் யாரும் வாய்ப்பு தருவதில்லை. அது ரணமாக இருக்கிறது என கூறி வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற பாடலைப் பாடி கண்கலங்கியுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் இதனைக் கண்டு வருந்திய மாடலும், பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான மீரா மிதுன் அவருக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வடிவேலுவின் சமீபத்திய பேச்சுகள், பேட்டிகளை பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்று வருத்தப்பட்டு இருக்கீங்க. எப்போதும் வெற்றிகரமான ஒரு மனிதரை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள். ஆனாலும் யாரையும் யாராலும் ஒதுக்க முடியாது. இது எனது வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடம்.

உங்களது தெனாலிராமன் படம் பார்த்திருக்கேன். அந்த படத்துக்கு நான் பெரிய ரசிகை. நீங்கள் தெனாலிராமன் படத்தில் பண்ணிய அனைத்து ரோலுமே நன்றாக இருந்தது. நிறைய பேர் நடிப்புக்கான விளக்கமே தெரியாமல் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் பெரிய லெஜெண்ட். நீங்கள் கலங்கவே கூடாது. நான் சொந்தமாக படம் தயாரிக்கவுள்ளேன். அதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நடியுங்கள். உங்களுடன் நான் நடித்தால் மிகவும் பெருமைப்படுவேன் என்று கூறியுள்ளார்.