நான் தற்கொலை செய்யப்போகிறேன்.! பிரதமர் மோடிக்கு தகவல் கொடுத்த பிரபல நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

நான் தற்கொலை செய்யப்போகிறேன்.! பிரதமர் மோடிக்கு தகவல் கொடுத்த பிரபல நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!


meera-mithun-has-posted-that-she-is-going-to-commit-sui

மீரா மிதுன் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாடலும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான சர்ச்சைக்கு பெயர் போன மீரா மிதுன், அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். 

இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளி விட்டார் என்று இவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 


இந்தநிலையில், சிலர் தொடர்ந்து என்னை துன்புறுத்துவதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறேன். நான் இறந்துவிட்டால் என்னுடைய சாவுக்கு காரணமான அனைவரையும் தூக்கில் இடவேண்டும் என பிரதமர் மோடிக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.