அடடா! இதுவேறயா... பிக்பாஸ் மீரா மிதுன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! என்னன்னு பார்த்தீர்களா!

அடடா! இதுவேறயா... பிக்பாஸ் மீரா மிதுன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! என்னன்னு பார்த்தீர்களா!Meera mithun going to direct her life history

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் மாடல் அழகியான மீரா மிதுன். இவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம்  உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு இயக்குனர் சேரன் மீது அவதூறுகளை கிளப்பி ரசிகர்களால் மோசமாக விமர்சனம் செய்யப்பட்டார்.

மேலும் அவர்  அண்மையில் நடிகைகள் குறித்தும், நடிகர் விஜய் மற்றும் சூர்யா குறித்தும் தரக்குறைவாக விமர்சித்து தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தார்.  அதனால் அவர் ரசிகர்களிடம் கடுமையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

இந்தநிலையில் மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் மீரா எனும் தமிழ்ச்செல்வி என்ற படத்தை இயக்குவதாக தெரிவித்துள்ளார். மேலும் அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்  அவர், மீரா மிதுன்..நான் பல வருட கடின உழைப்பால் திறமையால் பெற்ற பெயர். அனைவரும் எனது பெயரை பயன்படுத்திக் கொள்கின்றனர். மேலும் எனது பெயரின் மீது பொறாமை கொள்கின்றனர். விரைவில் எனது பயணம் தொடங்கும் என கூறியுள்ளார்