சோத்துக்கே வழியில்லை! இனி சாவதுதான் ஒரே வழி! கண்ணீர் விட்டு கதறிய மீரா மிதுன்!!

சோத்துக்கே வழியில்லை! இனி சாவதுதான் ஒரே வழி! கண்ணீர் விட்டு கதறிய மீரா மிதுன்!!


meera-mithun-cry-video-viral

தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மீரா மிதுன். அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

தன்னைத் தானே சூப்பர் மாடல் என கூறிக்கொள்ளும் அவர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவர் பிரபல நடிகர்கள் மற்றும் அவர்களது மனைவியை இழிவாக பேசியும் , பட்டியலின மக்கள் குறித்து தரக்குறைவாக பேசியும் வீடியோ வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீரா மிதுன் மீது புகார் அளித்த நிலையில் அவரை கடந்த ஆண்டு போலீசார் கைது செய்தனர்.

பின்னர் ஜாமினில் வெளிவந்த அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  6 மாதங்களாக நீதிமன்றத்திற்கு அலைந்து திரிவதால் வருமானமின்றி கையில் காசு இல்லாமல், சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும்,  என்னுடைய வளர்ச்சி யாருக்கும் பிடிக்கவில்லை, தெருவில் போகிறவர்கள் எல்லாம் தன்னை தவறாக பேசுவதால்,என் வீட்டிலும் என்னை சேர்த்து கொள்ள மறுக்கிறார்கள்.

நான் இறந்தால்தான் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் நான் செய்த சாதனைகள் தெரிய வரும் என்று கதறியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் இதனை கண்ட சிலர் வருத்தப்பட்டாலும் பலர் அவரை கிண்டல் செய்து ட்ரோல் செய்து வெளியிட்டு வருகின்றனர்.