ஓல்டுமேன் ரஜினி தொந்தரவு கொடுத்தார்! பிறந்தநாளன்று பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பிரபல நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஓல்டுமேன் ரஜினி தொந்தரவு கொடுத்தார்! பிறந்தநாளன்று பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பிரபல நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!


meera-mithun-complaint-on-rajinikanth

தமிழ் சினிமாவில் தனது நடிப்பால், ஸ்டைலால் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்தநாளை இன்று(12-12-2020) கொண்டாடுகிறார். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையடுத்து அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஏதேனும் கருத்துகளை கூறி சர்ச்சையை கிளப்பி வரும் மாடலும் நடிகையுமான மீராமிதுன் ரஜினி குறித்து பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஓல்டுமேன் ரஜினிகாந்த் அவரது பிஆர் டீமுடன் சமூக வலைத்தளங்களில் என்னை தொந்தரவு செய்து வருகின்றனர். இதற்கு சட்டப்படி என்ன தண்டனை தெரியுமா? என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் ஜெயலலிதா அம்மா இருந்திருந்தால் இந்த ஓல்ட் மேன் ரஜினிகாந்த் இப்படி செய்வாரா? தமிழ்நாட்டில் இந்த மாபியா கும்பல் குறிப்பாக எனக்கு எதிராக செய்யும் வேலைகள் குறித்த அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. என் மேல் கையை வைத்தால் நீங்கள் அவ்வளவுதான்!  மிஸ்டர் தமிழ்நாடு என் தந்தை மணிக்கு என்ன செஞ்சீங்க நினைவிருக்கா? என எச்சரிக்கை விடுத்து மீண்டும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.