கொலைமிரட்டல் புகார் !! கைது செய்யபடுவாரா இந்த பிக்பாஸ் பிரபலம்? வெளியான அதிர்ச்சி தகவல்!!

கொலைமிரட்டல் புகார் !! கைது செய்யபடுவாரா இந்த பிக்பாஸ் பிரபலம்? வெளியான அதிர்ச்சி தகவல்!!


meera mithun blackmailing business man for monwy issue

தமிழ் சினிமாவில் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மீரா மிதுன்.  மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மிஸ் இந்தியா மிஸ் தமிழ்நாடு உட்பட பல அழகி பட்டங்களை பெற்றுள்ளார். மீரா மிதுன் தொடர்ந்து பல சர்ச்சையில் சிக்கி வருபவர். இவர் பல பெண்களிடம் அழகுப்போட்டி நடத்துவதாக கூறி பணத்தை கொள்ளை அடித்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது.

இந்நிலையில் மீரா மிதுன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து பல பிரச்சினைகளை எழுப்பிய அவர் குறைந்த வாக்குகளை பெற்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

Meera mithun

இந்நிலையில் மீராவிற்கு  கடந்த இரு வருடங்களுக்கு முன்பு எழும்பூர் சேர்ந்த ஜோமைக்கேல் என்ற தொழிலதிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண பிரச்சினை ஏற்பட்டுள்ளது அதனால் இருவரும் தொடர்ந்து போலீசாரிடம் புகார் அளித்து வந்தனர். 

இந்நிலையில் சமீபத்தில் மீராமிதுன் ஜோ மைக்கேலுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய செல்போன் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இது தொடர்பாக மைக்கேல் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் மீரா மிதுன் மீது இருபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது மீரா மிதுன் பதிலளிக்க மறுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து மீண்டும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு மீரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.