உடல் எடை குறைத்து படு ஒல்லியாக மாறிய நடிகை மீரா ஜாஸ்மின்! லேட்டஸ்ட் புகைப்படம்!

உடல் எடை குறைத்து படு ஒல்லியாக மாறிய நடிகை மீரா ஜாஸ்மின்! லேட்டஸ்ட் புகைப்படம்!



Meera jasmine fat to slim look latest photos

2002 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.  மீரா ஜாஸ்மின், கேரளாவின் 1982 ஆம் ஆண்டு திருவல்லாவில் பிறந்தவர்.

தமிழில் ரன், விஜய் நடிப்பில் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, மற்றும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம், என பல படங்களில் நடித்தார். விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி திரைப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய திரைப்படம் என்றே கூறலாம்.

meera jasmine

நாட்கள் செல்ல செல்ல சினிமாவில் வாய்ப்பும் குறைய தொடங்கியது. இதனால் கடந்த 2014ஆம் ஆண்டு தனது 32 வயதில் துபாயை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமண செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் மீரா.

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி மிகவும் குண்டான தோற்றத்துக்கு மாறிய இவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் உடல் எடையை குறித்து மீண்டும் பழைய தோற்றத்துக்கு மாறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் மீரா ஜாஸ்மின். இதோ அவரது தற்போதைய புகைப்படங்கள்.

meera jasmine