நடிகை மீரா ஜாஸ்மின்னா இது...என்ன ஒரு ஆட்டம்...குவியும் லைக்ஸ்..வைரலாகும் வீடியோ.!

நடிகை மீரா ஜாஸ்மின்னா இது...என்ன ஒரு ஆட்டம்...குவியும் லைக்ஸ்..வைரலாகும் வீடியோ.!


Meera jasmine dance video

தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பின் இவர் நடிப்பில் வெளியான சண்டை கோழி திரைப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இவர் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

மேலும் மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின், கடந்த 2014ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாமல் குடும்பத்துடன் செட்டில் ஆனார்.

தற்போது மீண்டும் நடிப்பில் கவனம்சசெலுததியுள்ளார். திருமணமாகி 7 வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது மீரா ஜாஸ்மின் ஆடி அசத்திய நடன வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே லைக்குகளை குவித்து வருகிறது.