சினிமா

சும்மா சிக்கென 6 வருடங்களுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்! அதுவும் என்ன ரோலில் தெரியுமா?? ஷாக்கில் ரசிகர்கள்!!

Summary:

6 வருடங்களுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்! அதுவும் என்ன ரோலில் தெரியுமா?? ஷாக்கில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின் அதனைத் தொடர்ந்து அவர் விஜய், அஜித், விஷால், பரத் போன்ற பிரபலங்களுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். தனது துறுதுறுப்பான நடிப்பால் மீரா ஜாஸ்மின் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளார்.

அவர் கடந்த 2014ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு, சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். இதற்கிடையில் தற்போது நன்கு உடல் எடை குறைந்து ஸ்லிம்மான அவர் கிளாமரான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மீரா ஜாஸ்மின், மகள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் அவர் 19 வயது பெண்ணிற்கு அம்மாவாக நடித்துள்ளாராம்.

இதுகுறித்து மீரா ஜாஸ்மின் அளித்துள்ள பேட்டியில், அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் உங்கள் இமேஜ் பாதிக்காதா?  என கேட்டதற்கு அவர், அதுபற்றி நான் கவலைப்படவில்லை. அந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு படத்தில் நடிக்கும்போது பதற்றமாக இருந்தது. எனது மகளாக நடிக்கும் தேவிகாவும் நானும் நெருங்கிய தோழிகளாகிவிட்டோம் எனக் கூறியுள்ளார்.

 


Advertisement