சினிமா

ரஜினிக்கு ஜோடியாகிறாரா இந்த முன்னணி கனவு நாயகி! அவரே போட்டுடைத்த ஷாக் தகவல்!

Summary:

meena talk about movie with rajini

தமிழ் சினிமாவில் பல மாபெரும் பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர்  நடிகை மீனா. நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் 1982 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிப் படங்களில், பல நூறு திரைப் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார் நடிகை மீனா. இந்நிலையில் மீனா தற்போது முதல் முறையாக கரோலின் காமாட்சி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். விவேக்குமார் கண்ணன் இயக்கியுள்ள இந்த தொடரில் ஒய்.ஜி.மகேந்திரன், அண்டோ தாமஸ், திலீபன், அன்ட்ரியானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

meena க்கான பட முடிவு

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில்  மீனா கூறுகையில், கரோலின் காமாட்சி வெப்தொடர் கதை எனக்கு பிடித்து இருந்ததால் நடித்தேன். இதில் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்துள்ளேன்.  நான் நெடுங்காலமாக தமிழ் படங்களில் நடிக்காததால் சினிமாவிலிருந்து  ஒதுங்கி விட்டதாக கூறி வருகின்றனர். அப்படி எதுவும் இல்லை.

நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன். மலையாளத்தில் மம்முட்டி படத்தில் நடித்து வருகிறேன். மேலும் ரஜினிகாந்தின் புதிய படத்தில் நான் நடிக்க உள்ளதாக  தகவல்கள் பரவி வருகின்றன. அதுகுறித்து படக்குழுவினரிடம்தான் கேட்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம்தான் என கூறியுள்ளார்.
 


Advertisement