கணவரின் மரணம் குறித்து மனம்திறந்த மீனா.. "இப்படி மட்டும் நடந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமே" - உருக்கத்துடன் அதிரடி முடிவு.!

கணவரின் மரணம் குறித்து மனம்திறந்த மீனா.. "இப்படி மட்டும் நடந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமே" - உருக்கத்துடன் அதிரடி முடிவு.!


Meena post about her husband dead

கோலிவுட்டில் கடந்த 1982 ஆம் ஆண்டு "நெஞ்சங்கள்" என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களிலும் நடித்து பிரபலமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஒரு புதிய கதை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை மீனா, என் ராசாவின் மனசிலே, எஜமான், சேதுபதி, நாட்டாமை, கூலி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு கடந்த ஜூலை 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் வித்யாசாகருக்கு பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயால் உயிரிழந்தார்.

Actress meena

அவரது இறுதி சடங்குகளை நடிகை மீனா செய்தார். அத்துடன் நடிகர் ரஜினி, கமல் உட்பட பல பிரபல நடிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். இந்த நிலையில் "தனது கணவருக்கு உறுப்புகள் தானம் செய்ய டோனர்ஸ் கிடைத்திருந்தால் கண்டிப்பாக காப்பாற்றி இருக்கலாம்" என்று மீனா தற்போது தெரிவித்திருக்கிறார். 

மேலும் "அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும். ஒருவர் உறுப்பு தானம் செய்தால் 8 உயிர்களை காப்பாற்ற இயலும். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நான் தற்போது ஆர்கன் டொனேஷன் செய்கிறேன்" என்று மீனா தெரிவித்து இருக்கிறார்.