தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
"அது தான் தலைவர்' என்று முத்து பட ரீ ரிலீஸில் ரஜினியை பாராட்டிய மீனா!"
கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "முத்து". படத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு, ராதா ரவி, செந்தில், வடிவேலு, ஜெயபாரதி, பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இது மலையாளத்தில் வெளியான "தென்மாவின் கொம்பத்தின்" என்ற படத்தின் தழுவலாகும்.
இதில் ஜமீன்தாராக சரத் பாபுவும், அவரிடம் வேலை செய்பவராக ரஜினியும், மேடை நாடகக் கலைஞராக மீனாவும் நடித்திருப்பார்கள். இது சிறந்த நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் படமாக உருவாகி, இன்றைக்கும் ரசிகர்களின் பேவரைட் படமாக உள்ளது.
இந்நிலையில் வரும் டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பிறந்தநாள் பரிசாக இந்தப் படத்தின் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ரோகிணி திரையரங்கில் இயக்குனர் கே எஸ். ரவிக்குமார், மீனா ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்தனர்.
இதையடுத்து பேசிய மீனா "இந்த மழையில் கூட நீங்கள் படம் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தை இவ்வளவு கொண்டாட்டங்களுடன் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அது தான் தலைவர்" என்று கூறினார்.