கியூட்.. சுற்றுலா சென்ற இடத்தில் நடிகை மீனா செய்த காரியம்.! வைரலாகும் வீடியோவால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

கியூட்.. சுற்றுலா சென்ற இடத்தில் நடிகை மீனா செய்த காரியம்.! வைரலாகும் வீடியோவால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!


meena-enjoyed-in-tour-with-his-friend-photo-viral

தமிழ் சினிமாவில் பல டாப் ஸ்டார்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்து
பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை மீனா. இவர் நடித்த படங்கள் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டு வருகிறது. தற்போது துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் மீனா கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில்  முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மீனா மற்றும் அவரது குடும்பத்தினர் பெருமளவில் மனமுடைந்து போனர்.

 இந்நிலையில் கணவரின் மறைவால் துயரில் தவித்த மீனாவை அவரது தோழிகள்  தேற்றி வருகின்றனர். இந்த நிலையில் அவர் தற்போது அவரது தோழி ரேணுகா பிரவீன் உடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஆட்டம் பாட்டம் என அவர் ஜாலியாக இருந்துள்ளார். அந்த வீடியோக்களை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.