போட்டியாளர்களுக்கு இடையே நேர்ந்த மோதல்.! மூக்குடைந்து பலத்த காயத்தால் துடிதுடித்த பிரபல நடிகை!!
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 4 போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் கவின், மதுமிதா, ரேஷ்மா, சாக்ஷி, அபிராமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். பின்னர் கவின் மற்றும் சாக்ஷியின் காதல் விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி, பெரும் பிரச்சினைகள் வெடித்தது.
இவ்வாறு சர்ச்சைகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் அடுத்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுக்க புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் மதுமிதா, முகேன், சாண்டி தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பனிச்சறுக்கு செய்வது போன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் அவர்கள் தீவிரமாக விளையாடி வருகையில் மதுமிதா கீழே விழுந்து அவருக்கு மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.