"துருவ நட்சத்திரம் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுமா?! குழப்பத்தில் ரசிகர்கள்..
பிக்பாஸ் இறுதி நாளில் இப்படி ஒரு தவறு நடந்ததா? ஆதாரத்துடன் வெளிப்படுத்திய பிரபலம்.
பிக்பாஸ் இறுதி நாளில் இப்படி ஒரு தவறு நடந்ததா? ஆதாரத்துடன் வெளிப்படுத்திய பிரபலம்.

பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த ஞாயிற்று கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றினர். சாண்டி, லாஷ்லிய மற்றும் ஷெரின் ஆகியோர் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடத்தை பிடித்தனர்.
இந்நிலையில் பிக்பாஸ் இறுதி நாள் நிகழ்ச்சியின் எடிட்டிங்கில் நடந்த குளறுபடி ஓன்று வீடியோவாக வைரலாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
வீட்டில் இருந்து வெளியேறிய அவர் தனக்கு தரவேண்டிய சம்பளத்தை தருமாறும், தர மறுத்தால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகும் கூறப்பட்டது. இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சி சார்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது ஒருபுரம் இருக்க, மதுமிதாவோ அவரது கணவர் மோசசோ பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அப்படி இருக்க, இறுதி நாள் நிகழ்ச்சியில் மதுமிதாவின் கணவர் மோசஸ் கலந்துகொண்டதுபோல் வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
மதுமிதா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும்போது மோசஸ் அமர்ந்திருந்த காட்சியை விஜய் தொலைக்காட்சி இறுதி நிகழ்ச்சியில் கட் செய்து ஒட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது தவறுதலாக நடந்ததா? அல்லது இதற்கு பின் ஏதேனும் காரணம் உண்டா என்று தெரியவில்லை.
இந்நிலையில் இந்த வீடியோயோவை பார்த்த மதுமிதாவின் கணவர் நான் நிகழ்ச்சி போகவில்லை. எப்படி இப்படி நடந்தது என ஆதாரத்துடன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
@madhumithamoses நா போகல...நா போகல.. இது உண்மையா? program பார்த்தவங்க சொல்லுங்க 🙄🙄🙄 #Madhumitha #BiggBossTamil3 #BiggBossTamil https://t.co/F3JqPrjRNE
— madhumitha moses (@madhumithamoses) October 7, 2019
@madhumithamoses Omg😡😡😡😡 நா போகல... எப்படி இது நடந்தது????? @vijaytelevision#Madhumitha #BigBossTamil3 #BiggBoss13 pic.twitter.com/hVybyC6YXh
— madhumitha moses (@madhumithamoses) October 7, 2019