சினிமா பிக்பாஸ்

கவினிடம் எகிறிய மதுமிதா.! கடுப்பாகி கொந்தளித்த லாஸ்லியா!! சகுனி வேலையால் தொடரும் வெறியாட்டம்!!

Summary:

mathumitha angry talking with kavin

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. நேற்றுடன் 51 நாட்கள் முடிவு பெற்றுள்ள நிலையில் இதுவரை 7 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே சீசன் 3 பல்வேறு சர்ச்சைகள், சண்டைகளுடன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.மேலும் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் கவின், சாக்க்ஷி, லாஷ்லியாவின் முக்கோண காதல் கதை ஒருபக்கம் சுவாரசியமாக செல்ல கடந்த வாரம் சாக்க்ஷி வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து நடிகை வனிதா நேற்றைய முன் தினம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வந்து அனைவரையும் அதிர்ச்சி ஆக்கினார்.

இந்நிலையில் போட்டியாளர்கள் பற்றி அனைவரிடமும் கூறிய வனிதா இனி முகெனை நம்பாதே என்று அபிராமியிடம் கொளுத்தி போடமுகேன் மற்றும் அபிராமி உறவில் விரிசல் ஏற்பட்டு பெரும் பிரச்சினையாக வெடித்தது.

பிரபலங்கள்

இவ்வாறு இன்று மதுமிதா பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் பெண்களை அடிமையாக்கி யூஸ் பண்றீங்க என  நடிகை மதுமிதா கிளப்ப இதனால் அவருக்கும், கவினுக்கும் இடையே இடையே பெரும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

மேலும் அப்பொழுது நடிகை மதுமிதா உன்னை மாதிரி நாலு பொண்ணுங்கள யூஸ் பண்ணிக்கிட்டு உள்ளே இருக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என்று கூற மற்ற போட்டியாளர்கள் இவ்வாறு பேசுவது தவறு என கூறுகின்றனர்.

இதனை கேட்டுக்கொண்டிருந்ததப்பு செஞ்சா மக்கள் வெளிய அனுப்புவாங்க. இது நான் சம்பந்தப்பட்ட விஷயம் இதை பற்றி கதைக்க வேண்டாம் என்று கோபமாக கூறி விட்டு அங்கிருந்து செல்கிறார். இந்த பிரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement