சினிமா

மாஸ்டர் பட பிரபலத்திற்கு திருமணம்!! நேரில் சென்று வாழ்த்திய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்!

Summary:

லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களில் எடிட்டராக பணியாற்றிய பிலோமின் ராஜுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சிக்கு லோகேஷ் கனகராஜ் நேரில் சென்று தம்பதியினரை வாழ்த்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற மாநகரம் திரைப்படத்தில் எடிட்டராக பணியாற்றியவர் பிலோமின் ராஜ். அதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து ப்ளாக்பஸ்டர் படமான ராட்சசன் படத்திற்கும் அவரே எடிட்டிங் செய்துள்ளார்.

மேலும் ஃபிலோமின் ராஜ் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி மற்றும் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து செம ஹிட்டான மாஸ்டர் திரைப்படத்திற்கும் எடிட்டிங் பணி மேற்கொண்டுள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கவிருக்கும் விக்ரம் படத்திற்கும் பணியாற்ற உள்ளார்.

இந்நிலையில் எடிட்டர் பிலோமின் ராஜ்க்கு திருமணம் நடைபெற்றுள்ளது. எடிட்டர் பிலோமின் ராஜ்க்கு, திவ்யா பிரதீபா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது,. இந்த நிகழ்ச்சிக்கு லோகேஷ் கனகராஜ் நேரில் சென்று தம்பதியினரை வாழ்த்தியுள்ளார்.  மேலும் அங்கு எடுத்த செல்பி புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement