மாஸ்டர் சாதனை! வெற்றி கொண்டாட்டத்தில் ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள்!

மாஸ்டர் சாதனை! வெற்றி கொண்டாட்டத்தில் ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள்!


master-movie-blackbuster-50-days-dfans-celebration

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். மேலும், ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், மகேந்திரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், சஞ்சீவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனாவால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வெளியாவது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது.

master

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதனை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் ட்வீட்டரில் #MASTERBlockBuster50Days என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.