சினிமா

எல்லாம் அவராலதான்! நன்றி மறக்காமல் மாஸ்டர் மகேந்திரன் செய்த காரியத்தை பார்த்தீர்களா! குவியும் வாழ்த்துக்கள்!!

Summary:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டான திரைப்படம் மாஸ்டர் இத்திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்தது. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக செம கெத்தான பவானி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மிரட்டியிருந்தார். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் சிறுவயது பவானியாக வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாஸ்டர் மகேந்திரன்.

அவர் படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் அவரது நடிப்பு ரசிகர்களால் பெருமளவில் பாராட்டப்பட்டது. நடிகர் மகேந்திரன் நாட்டாமை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர். அதனை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் பின்னர் ஹீரோவாகவும்சில படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக நடிக்காமல் இருந்த அவருக்கு மாஸ்டர் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

 அதனைத் தொடர்ந்து நடிகர் மகேந்திரனுக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில் அவர் சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் நன்றி மறவாமல் அந்த காரின் சாவியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையால் வழங்குமாறு கூறி வாங்கியுள்ளார்.

இத்தகைய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த அவர் புதிய ஆண்டு, புதிய வாழ்க்கை, புதிய பயணம் எல்லாம் மாஸ்டரில் இருந்து தொடங்கியது என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


Advertisement