த்ரிஷாவை விட வயது குறைவு... ஆனால் அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை! யார் தெரியுமா?
பீஸ்ட் பட கதாநாயகி எடுத்த தவறான முடிவு... அவரே பகிர்ந்து கொண்ட தகவல்.!?

தென்னிந்திய திரையுலகில் பெயர் பெற்ற நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் முகமூடி என்ற படத்தில் ஜீவாவுடன் இணைந்து கதாநாயகியாக கோலிவுட் திரையுலகில் காலடி எடுத்துவைத்தார். தெலுங்கில் லைலா கோசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
மேலும் பூஜா ஹெக்டே, தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த வெற்றி பெற்று முன்னணி கதாநாயகியாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் இவருக்கான திரைக்களம் சரியாக அமையவில்லை என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
பூஜா ஹெக்டே முன்னணி நடிகரான இளையதளபதி விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்கில் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இந்த இரு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனால் பூஜா ஹெக்டே மார்க்கெட் சரிந்தது. ஆனால் இதைப் பற்றி பெரிதும் கண்டு கொள்ளாமல் பாசிட்டிவ்வாகவே எடுத்துக் கொண்டார்.
சமீபத்தில் பிரபல யூட்யூப் வலைதளத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தொடர் திரைப்பட தோல்வி பற்றி இவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பூஜா "வாழ்க்கையில் நம் கையில் எதுவும் இல்லை சில நேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் தவறாகலாம் அதற்குரிய காரணத்தை கண்டுபிடித்து தவறை திருத்திக் கொள்ள வேண்டும். இனி படங்களின் கதைகளை தேர்ந்தெடுக்கும் போது கவனத்துடன் தேர்ந்தெடுப்பேன்" என்று மிகவும் பாசிட்டிவ்வாக பதில் அளித்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.