நான்கு நாளில் விஜயின் குட்டி ஸ்டோரி செய்த சாதனை! குவியும் லட்சக்கணக்கான லைக்குகள்!

நான்கு நாளில் விஜயின் குட்டி ஸ்டோரி செய்த சாதனை! குவியும் லட்சக்கணக்கான லைக்குகள்!


Master

மாநகரம், கைதி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துவருகிறார் தளபதி விஜய். படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துவருகிறார். டெல்லி, கர்நாடகா, சென்னையை தொடர்ந்து திருநெல்வேலியில் படப்பிடிப்பு நடக்கிறது.

ஏற்கனவே படத்தின் 1,2,3 லுக் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில் புரொமோஷன் வேலைகள் தொடங்கிவிட்டது.

master

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தளபதி விஜய் குரலில் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது வரை இப்பாடல் தான் யூடியூபில் No.1 டிரேடிங்கில் இருந்து வருகிறது.

மேலும் இப்பாடல் தற்போது வரை 15 மில்லியன் பார்வையாளர்களையும் 1.2 மில்லியன் லைக்ஸயும் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.