தனது மகனால் பெரும் மனவருத்தத்தில் இருந்த பிக்பாஸ் சரவணன்.! படக்குழு கொடுத்த மிகபெரும் சர்ப்ரைஸ்!!marutha-movie-theme-gave-surprise-to-bigboss-saravanan

பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த 105 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில் கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பருத்திவீரன் சித்தப்பு சரவணன். இவர் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் வெளிப்படையாக இருந்துவந்தார்.

 இந்நிலையில் அவர் தான் பேருந்தில் பெண்களை உரசியுள்ளதாக கமலிடம் பேசுகையில் கூறியுள்ளார்.அது பெரும் சர்ச்சையை கிளப்பி கண்டனங்கள் எழுந்த நிலையில் அதற்கு மன்னிப்பும் கேட்டார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் திடீரென இரவோடு இரவாக சரவணனை வீட்டை விட்டு வெளியேற்றியது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.  மேலும் இதனால் சரவணனும் மன வருத்தத்திற்கு ஆளானார். 

saravananஇருப்பினும் அவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது. மேலும் அவர் தற்போது பாரதிராஜாவின் உதவியாளர் கிருஷ்ணா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட இப்படத்தில் சரவணன் அண்ணனாகவும், அவருக்கு தங்கையாக ராதிகாவும் நடித்து வருகின்றனர். மேலும் அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனியில் நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் சரவணன் மகன் தீரஜ்ஜிற்கு நேற்று பிறந்தநாள். படப்பிடிப்பில் இருந்த சரவணன் தனது மகனின் பிறந்தநாளன்று அவனுடன் இருக்க முடியாதோ என மிகவும் வருத்தமடைந்துள்ளார். இதனை அறிந்த படக்குழு சரவணனின் குடும்பத்தாரைப் படப்பிடிப்பு தளத்திற்கு வரவழைத்து சரவணன் மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

saravanan