இயக்குனராகும் தனுஷ் பட நடிகை; அட இவருக்குள் இப்படி ஒரு திறமையா அருமை.!mariyan-movie-actress-parvathi---new-movie-direction

தமிழ் சினிமாவில் பூ, மரியான் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை பார்வதி. இவ்விரண்டு படங்களிலும் தனது வித்தியாசமான நடிப்பை  
வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பே பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பிறகே நடிகையாக மாறியுள்ளார்.

இந்நிலையில் விரைவில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் பேசும் போது: விரைவில் நான் படம் இயக்க திட்டமிட்டு உள்ளேன். அதற்கான கதை தயாராக இருக்கிறது. ஏற்கனவே பல நடிகைகள் படம் இயக்கி வெற்றிபெற்று இருக்கிறார்கள். ஒரு கதாநாயகியாக இது எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும்.

danush 

எனக்குள் பல வருடங்களாக மறைந்துள்ள பல திறமைகளை வெளிப்படுத்த இந்த படம் உதவும். என்ன கதை என்பது பற்றி இப்போது சொல்ல மாட்டேன். நான் படம் இயக்க வருவது, ஒரு இயக்குனராக என்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. திரையில் இதுவரை சொல்லப்படாத கோணத்தில், மிகவும் நேர்மையாக ஒரு கதை சொல்ல வேண்டும் என்றுதான் இயக்குனராக இருக்கிறேன்’’ என்றார்.