நான் என்னவாக போகிறேன் என்று தெரியாமல் இருந்தேன்" மாணவர்கள் மத்தியில் மாறி செல்வராஜ் புலம்பல்..Mari Selvaraj speech

"பரியேறும் பெருமாள்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முன்னதாக இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக இருந்தார். தொடர்ந்து கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

Selvaraj

தமிழ் சினிமாவை வேறு பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்கும் இயக்குனர்களில் மாரி செல்வராஜும் குறிப்பிடத்தக்கவர். இவரது படங்கள் அனைத்தும் சமூக அவலங்களைப் பற்றி பேசுவதாகவே உள்ளன. சமீபத்தில் திருநெல்வேலியில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாரி செல்வராஜ் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்வில், "நான் எனக்கான வாய்ப்பை சரியாகவும், நேர்மையாகவும் பயன்படுத்துகிறேன். நான் படித்த புத்தகங்கள் தான் என்னை இந்த அளவுக்கு மாற்றி இருக்கிறது. சக மனிதர்களை நாம் எப்போதும் மதிக்க வேண்டும். 'என்ன ஆகப் போகிறேனோ' என்று இருந்த என்னை, கலை தான் இந்தளவுக்கு மாற்றி இருக்கிறது.

Selvaraj

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பதை விட யாரையும் காயப்படுத்தாமல் வாழ வேண்டும். இப்படி மாணவர்கள் மத்தியில் என்னை பேச அழைத்திருப்பது நான் சரியான பாதையில் தான் போகிறேன் என்ற தெம்பைக் கொடுக்கிறது" என்று கூறியுள்ளார்.