
maraintha-nadigaigaludan-nadiththa-nadigaikku-kiddaika-poguthu
தமிழ் சினிமாவில் ஒவ்வொருவரும் நாளுக்கு நாள் ஒவ்வொரு சாதனை செய்து வருகின்றனர்.கன்னட திரையுலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு கர்நாடக மாநில அரசு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில் 2017ஆம் ஆண்டிற்கான விருதுப் பட்டியலுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் விவரம், மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுப் பட்டியலில்லட்சுமி தான் புரிந்த சாதனைக்கு விருது வாங்கவுள்ளார். டாக்டர்.ராஜ்குமார் விருதிற்கு பழம்பெரும் நடிகை லட்சுமியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர் கன்னட மொழி மட்டுமல்லாது, மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவர் சிவாஜி, எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினி ,சிவகுமார் என சில முன்னணி நடிகர்கர்களுடன் நடித்துள்ளார்.குடும்பப்பாங்கான படங்களில் மிகவும் அற்புதமாக நடிப்பார்.இவர் விசு இயக்கத்தில் மின்சாரம் சம்சாரம் படத்தில் அருமையாக நடித்து இருப்பார்.
தனது இயக்குநர் பயணத்தை 1992ல் தொடங்கினார். டாக்டர். விஷ்ணுவர்தன் பெயரில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தயாரிப்பாளர் ஜிஎஸ் லட்சுமிபதி தேர்வாகியுள்ளார். இவர் காடு, சிடெகு சிண்டே, உயாலே, தேவர மக்களூ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
மேலும் ஹிந்தி, பெங்காலி மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றவர். நடிகை லட்சுமி தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளை வென்றவர். இயக்குநர் புட்டன கனகல் விருதுக்கு எஸ்.நாராயண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் எழுத்தாளர், வசன கர்த்தா, இசையமைப்பாளர் உள்ளிட்டவற்றில் பங்கு வகித்துள்ளார்.
இவருக்கு தற்போது வயது 63 ஆகிறது. கன்னட சினிமாத்துறை இவருக்கு மறைந்த பிரபல நடிகர் ராஜ்குமார் பெயரில் இந்த ஆண்டுக்கான விருதை வழங்கவுள்ளதாம்.
Advertisement
Advertisement