ஹைய்யா... மார்கழி திங்களுக்கு டேட் கிடைச்சாச்சு.! மனோஜ் பாரதிராஜாவின் படம் ரிலீஸ் எப்போது.?

ஹைய்யா... மார்கழி திங்களுக்கு டேட் கிடைச்சாச்சு.! மனோஜ் பாரதிராஜாவின் படம் ரிலீஸ் எப்போது.?


manoj-bharathiraja-debut-film-as-a-director-got-a-relea

தாஜ்மஹால் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ். இவர் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன். தனது தந்தை இயக்கிய தாஜ்மஹால் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், ஈஸ்வரன், மாநாடு, விருமண் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் மனோஜ் பாரதிராஜா.

Kollywoodஇயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ஷியாம் செல்வன், ரக்க்ஷனா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் பாரதிராஜாவும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

Kollywoodஇந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் மார்கழி திங்கள் திரைப்படம் வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியாகும் என பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.