அவரது நட்பை இழக்க நான் தயாராக இல்லை! நடிகர் வடிவேலு அதிரடி புகார்! உருக்கமாக விளக்கமளித்த மனோபாலா!
தமிழ்சினிமாவின் நகைச்சுவை நடிகர் வடிவேலு மற்றும் சிங்கமுத்துவிற்கு இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் மனோபாலாவின் யூடியூப் சேனலில் நடைபெற்ற பேட்டியில் நடிகர் சிங்கமுத்து கலந்து கொண்டார். அப்பொழுது அவர் நடிகர் வடிவேலு குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் வடிவேலு, மனோபாலாவின் யூடியூப் சேனல் பேட்டியில் நடிகர் சிங்கமுத்து தன்னை குறித்து தரக்குறைவாகவும், தவறான செய்திகளையும் பதிலளித்துள்ளார். மேலும் அந்த வீடியோவை நடிகர்கள் பலரும் உள்ள SIAA லைப் மெம்பர்ஷிப் என்ற வாட்ஸ்அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே சிங்கமுத்து மற்றும் மனோபாலா மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் மனோபாலா கூறியதாவது, யூடியூப் சேனலில் வடிவேலு குறித்து சிங்கமுத்து பேசியதை ஏற்கனவே பல இடங்களிலும் பேசியுள்ளார். அவர் என் மேல் ஏன் புகார் கொடுத்தார் என தெரியவில்லை. அவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஒரு நல்ல கலைஞனின் நட்பை இழக்க நான் விரும்பவில்லை வடிவேலு இப்போது கோபமாக இருக்கிறார். கோபம் தணிந்ததும் இதுகுறித்து பேசுவேன். அவர் கண்டிப்பாக புரிந்து கொள்வார் என நம்புகிறேன் என்னை மன்னிச்சுடுடா எனக் கூறியுள்ளார்.