சினிமா

திரையுலகையே சோகத்தில் மூழ்கடித்த விசுவின் மரணம்! மாஸ்க் அணிந்து இறுதி சடங்கில் கலந்து கொண்ட பிரபலங்கள்! வைரலாகும் புகைப்படம்

Summary:

Manobala participate visu funeral

தமிழ் சினிமாவில் குடும்பம் ஒரு கதம்பம், சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு உள்ளிட்ட குடும்ப திரைப்படங்களை இயக்கி நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் விசு. இவரது படங்களுக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனை தொடர்ந்து அவர்  மெல்ல திறந்தது கதவு, அருணாச்சலம், உழைப்பாளி, மன்னன், ஜி, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான படங்களில்  நடித்துள்ளார்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, கதாசிரியர் என பன்முக திறமை கொண்டு விளங்கிய அவர் திரைப்படம் மட்டுமின்றி பிரபல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விசு சிகிச்சை பலனின்றி நேற்று சென்னையில் உயிரிழந்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் முடங்கி இருக்கும் நிலையில் அவரது மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 இந்நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா, மற்றும் இயக்குனர் உதயகுமார் இருவரும் முகத்தில் மாஸ்க் அணிந்து விசுவின்  இறுதிச்சடங்கில் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement