அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
காமெடி நடிகர் மனோ பாலா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து மரணகலாய் செய்யும் ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் தனது வசனங்களாலும், உடல் அமைப்பாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் காமெடி நடிகர் மனோபாலா. இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்துள்ள காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடையே பெருமளவில் ரசிக்கப்பட்டு வருகிறது.மேலும் மனோபாலா காமெடி நடிகர் மட்டுமின்றி, 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஜிம்மில் தம்பிள்ஸ் எடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நடிகர் மனோ பாலாவை மரணகலாய் கலாய்த்து வருகின்றனர்.
— manobala (@manobalam) February 4, 2020