சினிமா

17 வருஷத்திற்கு பின் மீண்டும் தியேட்டரில் ரிலீசாகும் சிம்புவின் சூப்பர்ஹிட் திரைப்படம்!! எப்போ தெரியுமா?

Summary:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக களறங்கி ஏராளமான திரைப்பட

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக களறங்கி ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இந்நிலையில் அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

அதனை தொடர்ந்து அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிம்பு ஜில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்திலும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.  

image

இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு சிம்பு இரட்டை வேடத்தில் நடித்த படம் ‘மன்மதன்’. இப்படத்தில் ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, சந்தானம் என பலரும் நடித்திருந்தனர். செம ஹிட்டான இந்த திரைப்படம் மீண்டும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் வரும் மார்ச் 19-ம் தேதி மீண்டும் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Advertisement