அடேங்கப்பா! சிம்பு பட நடிகை மஞ்சிமா மோகனா இது? திடீரென இப்படி ஆகிட்டாரே!! செம ஷாக்கான ரசிகர்கள்!!manjima mohan latest photo viral


மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர் மஞ்சிமா மோகன். இவர் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு வடக்கன் செல்பி என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தில் நடித்து அனைத்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

 இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதனைத் தொடர்ந்து மஞ்சிமா மோகன் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் தற்போது நன்கு உடல் எடை அதிகரித்து செம குண்டாகி விட்டார். இந்நிலையில் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் அட மஞ்சிமா மோகனா இது? இப்படி ஆகிட்டாரே!! என அதிர்ச்சியடைந்துள்ளனர்.