இதோ வந்தாச்சு அப்டேட்... கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணையும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது.?

இதோ வந்தாச்சு அப்டேட்... கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணையும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது.?



manirathnam-and-kamal-hassan-project-update-about-first

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி மீண்டும் சுறுசுறுப்பாக நடிக்க தொடங்கி இருக்கிறார் உலக நாயகன்.

இயக்குனர் சங்கரின் இந்தியன் 2, எச். வினோத் இயக்கத்தில் பெயர் அறிவிக்கப்படாத ஒரு திரைப்படம், பிரபாஸ்  நடிப்பில் ப்ராஜெக்ட் கே என்ற திரைப்படத்தில் வில்லன் என திரை உலகில் கலக்கி வருகிறார் உலக நாயகன். மேலும் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் மீண்டும் மணிரத்னத்துடன் இணைய இருக்கிறார்.

Kollywoodஇந்தத் திரைப்படம் தொடர்பான அறிவிப்பு மட்டுமே வெளிவந்த நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும்  ப்ரோமோ இரண்டும் கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

Kollywoodமணிரத்தினம் இயக்க இருக்கும் திரைப்படம் என்பதால் ஏ.ஆர்.ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பது உறுதியாக இருக்கிறது. மேலும் தமிழ் சினிமாவின் இரண்டு இளம் ஹீரோக்கள் இந்தத் திரைப்படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அது உறுதியாகி இருக்கிறது. துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோரின் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பது உறுதியாக இருக்கிறது. ஆனால் இதனைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.