பொதுமேடையில் கணவரால் பட்ட அவமானம்! அதிரடியாக மணிமேகலை விடுத்த சவால்! வைரலாகும் வீடியோ!

பொதுமேடையில் கணவரால் பட்ட அவமானம்! அதிரடியாக மணிமேகலை விடுத்த சவால்! வைரலாகும் வீடியோ!



manimegalai-post-dancing-video-with-husband

சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் தனது கலகலப்பான பேச்சால் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் மணிமேகலை. இவர் அப்பொழுதே ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர். 

அதனை தொடர்ந்து மணிமேகலை,  நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரை காதலித்து, குடும்பத்தினரை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் தற்போது அழகிய, சிறந்த காதல் ஜோடியாக விளங்கி வருகின்றனர். 

Manimegalai

மேலும் சமீப காலமாக அவர்கள் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகியுள்ளனர். இந்நிலையில் மணிமேகலை மற்றும் ஹுசைன்  இருவரும் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் speed என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். அப்பொழுது நடன இயக்குனரான ஹுசைன்  பயங்கரமாக நடனமாடியுள்ளார். அவருடன் இணைந்து ஆட முடியாத நிலையில் மணிமேகலை மேடையில் தட்டுத்தடுமாறியுள்ளார். 

இந்த வீடியோவை மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, முதலில் இந்த நடனத்தை கத்துக்கணும், இல்லையென்றால் நல்லா ஆட தெரியும் பசங்களோட ஷோ பண்ணக்கூடாது. நான் பெரிய டான்ஸராக வந்து காண்பிக்கிறேன் என கிண்டலாக சவால் விடுத்துள்ளார்.