பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் திவாகர் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி...
பளபளக்கும் தேகம்.. மனம்கொத்தி பறவை படத்தில் நடித்த நாயகி இப்போ எப்படி இருக்கார் பாருங்க...
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த நாயாகியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோவாக அறிமுகமான முதல் படம் மனம் கொத்தி பறவை. காதல், காமெடி என படம் முழுவதும் ரசிகர்களை மிகவும் ஜாலியாக என்ஜாய் பண்ணவைத்த படங்களில் இதுவும் ஒன்று.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர்தான் ஆத்மியா. கடந்த 2014ல் போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்திலும் ஹீரோயினாக நடித்த இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் பின் மலையாள சினிமா பக்கம் சென்றுவிட்டார்.
தற்போது மலையாளத்தில் ஒருசில படங்களில் பிஸியாக உள்ளார் அம்மணி. இந்நிலையில் தமிழ் சினிமாவில் இவரை நீண்ட நாட்களாக பார்க்காத ரசிகர்களுக்கு, இவருடைய தற்போதைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

