சினிமா

படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே, தியேட்டரில் இந்த வாலிபர் செய்யுற காரியத்தை பார்த்தீங்களா!! வைரலாகும் வீடியோ !!

Summary:

man sleeping at theatre while nerkonda parvai movie running

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி  கொடுத்துள்ளார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ner konda paarvai க்கான பட முடிவு

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8 உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் குவிகிறது. மேலும் பல பிரபலங்களும் படத்திற்கு வாழ்த்து கூறி வருகின்றனர் .

ஆனாலும் சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்கள் எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் இப்படத்தால் திருப்தியடையவில்லை. இந்நிலையில் படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கும்போதே ரசிகர் ஒருவர் கீழே படுத்து தூங்குவது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.  


Advertisement