ஆசைஆசையாக ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் செய்த இளைஞர்! பார்சலை திறந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி!! வீடியோ இதோ!!Man got deilvery onion for ordering onion rings

உலகம் முழுவதும் ஆன்லைனில் உணவு டெலிவரியில் நாம் ஆர்டர் செய்யும் உணவு ஒன்றாகவும், டெலிவரி செய்யப்படும் உணவு ஒன்றாகவும் மாற்றிக் கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. அவ்வாறு வாலிபர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு மாறி டெலிவரி செய்தது குறித்து பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

டெல்லியைச் சேர்ந்த உபைத் என்ற இளைஞர் ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் மூலமாக ஆசைஆசையாக ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் செய்துள்ளார். தொடர்ந்து சிறிது நேரத்தில் உணவு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த உணவு பார்சலை பிரித்து பார்த்தபோது அந்த நபருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

அதாவது ஆர்டர் செய்த ஆனியன் ரிங்ஸ்க்கு பதிலாக, வெறும் வெட்டப்பட்ட வெங்காயம் மட்டுமே இருந்துள்ளது. இந்நிலையில் ஏமாந்துபோன அந்த இளைஞர் உணவகத்தைக் கண்டிக்கும் விதமாக டெலிவரி செய்யப்பட்ட அந்த வெங்காயத் துண்டுகளை தனது விரல்களில் மோதிரம் போல மாட்டிக் கொண்டு போஸ் கொடுத்து எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெருமளவில் பரவி வருகிறது.