தளபதி 68 படத்தில் இணைந்த பிரபல நடிகை... யார் அவர் தெரியுமா.? பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தளபதி 68 படத்தில் இணைந்த பிரபல நடிகை... யார் அவர் தெரியுமா.? பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!



Malavika Sharma joined thalapathy 68 movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் லியோ படத்திற்கு பிறகு, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம், சினேகா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டைட்டிலை வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. 

இந்நிலையில் தளபதி 68 படத்தில் நடிகை மாளவிகா ஷர்மா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தளபதி 68 படத்திற்காக வெங்கட் பிரபுவுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், விஜய்யுடன் இணைந்து திரையில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.