தங்க நிற உடையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!?

தங்க நிற உடையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!?


Malavika mohanan gold dress photoshoots viral

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் மாளவிகா மோகனன். இவர் முதன் முதலில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு கதாநாயகியாக நடித்துள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து திரைத்துறையில் தனக்கென தனி இடத்தை நிலை நாட்டியுள்ளார் மாளவிகா மோகனன்.

malavika

இதன் பின்பு தமிழில் மாஸ்டர், பேட்ட போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இதனால் மாளவிகா மோகணனிற்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்து வந்தது.

இதனை அடுத்து தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் தங்கலான் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகின்றன. மேலும் விரைவில் இப்படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடையும் என ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

malavika

இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகையாக இருந்து வரும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் செய்து அதனை பதிவிட்டு வருவார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்க நிற உடையில் போட்டோ சூட் செய்து பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.