சினிமா

இணையத்தில் ட்ரெண்டாகிய வேற லெவல் மீம்ஸ்கள்! அதை பார்த்த நம்ம மாஸ்டர் நடிகையின் ரியாக்ஷனை பார்த்தீர்களா!!

Summary:

தன்னை வைத்து இணையத்தில் டிரெண்டாகும் மீம்ஸ்களை ரசித்து மாளவிகா மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், மகேந்திரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், சஞ்சீவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மாஸ்டர் படப்பிடிப்பு முடிவடைந்ததும் கொரோனா பிரச்சனையால் ரிலீஸாவது தள்ளிப்போய் கொண்டிருந்த நிலையில், ஒருவழியாக பொங்கல் தினத்தை முன்னிட்டு படம் அனைத்து தியேட்டர்களிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் குவித்தது. 

மேலும் இந்த படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் நாயகியாக மாளவிகா மோகன் நடித்திருப்பார். உணர்ச்சிகரமான அவரது முக பாவனைகள் அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. மேலும் சிலர் அதனைப் வித்தியாசமான மீம்ஸ்களாக உருவாக்கி இணையத்தில் டிரெண்டாக்கினர். 

இந்த நிலையில் அதனை கண்ட நடிகை மாளவிகா, நான் எனது மீம்ஸ்களை லேட்டாகதான் பார்த்தேன். மிகவும் நகைச்சுவையாக உள்ளது. இதில் எனக்கு மிகவும் பிடித்த சில மீம்ஸ்களை பகிர்ந்துள்ளேன். என்னை பார்த்து என்னாலே சிரிக்க முடியவில்லை என்றால் வாழ்க்கை போரடித்து விடும் இல்லையா? எனவும் கேட்டுள்ளார்


Advertisement