"இது எனக்கு பயமாக இருக்கு. யாராவது என் கையைப் பிடிச்சிக்குறீங்களா?!" தங்கலான் நடிகையின் ட்விட்டர் பதிவு!

"இது எனக்கு பயமாக இருக்கு. யாராவது என் கையைப் பிடிச்சிக்குறீங்களா?!" தங்கலான் நடிகையின் ட்விட்டர் பதிவு!



Malavika moganan twitter post viral

ரஜினிகாந்த் நடித்த "பேட்ட" படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இதையடுத்து விஜயின் "மாஸ்டர்" படத்தில் விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இவரை நடிக்க வைத்தார்.

malavika

மாஸ்டர் படத்தில் வரும் "அந்தக் கண்ணப் பாத்தாக்கா" பாடலில் இவரது நடனம் அனைவரையும் கவர்ந்தது . இதையடுத்து தனுஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியான "மாறன்" திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை.

இந்நிலையில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் படம் "தங்கலான்". விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் வரும் ஜனவரி 26ம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

malavika

இதையடுத்து இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. காட்டுவாசிப் பெண்ணாக நடித்திருக்கும் மாளவிகா தனது ட்விட்டர் பதிவில், "எனக்கு டப்பிங் பேசுவது தான் மிகவும் கடினமான வேலை. யாராவது என் கையைப் பிடிச்சிக்குறீங்களா? எனக்கு பயமாக இருக்கு" என்று குறிப்பிட்டுள்ளார்.