இந்த வயசுலேயும் இப்படியா? தலைகீழாக மாளவிகா வெளியிட்ட ஹாட் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!

இந்த வயசுலேயும் இப்படியா? தலைகீழாக மாளவிகா வெளியிட்ட ஹாட் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!


malavika-latest-yoga-image-viral

தமிழ் சினிமாவில் உன்னைத்தேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்த மாளவிகா பின்னர் வாய்ப்புகள் குறைந்து துணை நடிகையாக நடிக்க துவங்கினார். பின்னர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வந்தார் .

இந்நிலையில் மாளவிகா நடனமாடிய வாழ மீனுக்கும், விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் ரசிகர்களிடையே பெரும் அளவில் பிரபலமாகி இன்றுவரை மறக்கமுடியாத ஒரு பாடலாக உள்ளது.

malavika

தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்த மாளவிகா தெலுங்கு,மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்தார். பின்னர் அவரது மார்க்கெட் குறைந்த நிலையில் சினிமாவை விட்டு விலகி முற்றிலும் தனது குடும்பத்தை கவனித்து வந்தார். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

பின்னர் உடல் எடை அதிகரித்து மிகவும் குண்டாக இருந்த மாளவிகா தொடர்ந்து சில உடற்பயிற்சிகள் மற்றும் யோகாவினால் தனது உடல் எடையை குறைத்துள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் தான் யோகா செய்யும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா என வியந்து வருகின்றனர்.

malavikamalavika